SIDDHA NEWS
நினைவாற்றலைத் தூண்ட:
நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
இருமல் குறைய:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
தொண்டை கரகரப்பு குணமாக
நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
கோழைக்கட்டு குணமாக:
நாீர் பிரம்மி வேரை அரைத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து நெஞ்சில் தடவினால் கோழைக்கட்டு நீங்கும்.
வீக்கங்கள் கரைய
நீர் பிரம்மி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களின் மீது ஒற்றடமிட்டுஅதன்மீது வைத்துக் கட்டினால் வீக்கங்கள் கரையும்.
மூக்கடைப்பு குறைய
இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
கண்வலி குறைய
கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
தோல் நோய்கள் குறைய
இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.
